ராஜபாளையம் அருகே புத்தூர் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. பின்னர் தளவாய்புரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில் காவல் துறையினர் புத்தூர் அரசு மதுபானக்கடை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சாக்கு மூட்டைகளுடன் வந்த கார் மற்றும் டூவீலரை நிறுத்தி சோதனை செய்த போது ஒன்றரை லட்சம் மதிப்பிலான 54 கிலோ குட்கா பொருள்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. கார், பைக் பறிமுதல் செய்து பின்னர் விசாரணையில் தென்காசி மாவட்டம் இனாம் கோவில்பட்டியைச் சேர்ந்த செல்லச்சாமி. அண்ணச்சாமி இருவரையும் தளவாய்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.