ஆண்டாள் கோயிலில் பழமையான கொடிமரங்கள், யாளி சிலைகள் மாயமான விவகாரத்தில் சிலை கடத்தல் பிரிவு துணை கண்காணிப்பாளர் தலைமையில் பத்துக்கு மேற்பட்ட போலீசார் திடீர் சோதனை
ஸ்ரீ ஆண்டாள் கோவில் கொடிமரம் மற்றும் சிலைகள் காணவில்லை என நிர்வாக அதிகாரி புகார் அடிப்படையில் திடீர் சிலை கடத்தல் பிரிவு துணை கண்காணிப்பாளர் மற்றும் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்
இந்நிலையில் திருக்கோவில் நிர்வாக அதிகாரி முத்துராஜா மதுரையில் அமைந்துள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் புகார் ஒன்று அளித்திருந்தார் அதில் கடந்த 2015 மற்றும் 16 ஆம் ஆண்டுகளில் ஸ்ரீ ஆண்டாள் கோவில் குடமுழுக்கு விழா மற்றும் தமிழக அரசின் முத்திரை சின்னமாக விளங்கும் இராஜகோபரம் அமைந்துள்ள ஸ்ரீ வடபத்ரசயனர் திருக்கோவில் கும்பாபிஷேக விழாக்கள் நடைபெற்றது. குறிப்பாக திருக்கோவிலில் நடைபெறும் உற்சவங்களின் போது விழாக்கள் ஆரம்பமாகும் போது கொடியேற்றும் கொடி மரங்கள் மூன்றும் அகற்றப்பட்டு புதிய கொடி மரங்கள் நிர்மாணிக்கப்பட்டது.
அவ்வாறு அகற்றப்பட்ட பழமையான மூன்று கொடி மரங்களில் செப்பு தகடு உள்ளிட்ட விலை உயர்ந்த உலோகங்கள் பதிக்கப்பட்டிருந்தது. மூன்று கொடி மரங்களில் தற்போது ஒன்றைத் தவிர மற்ற இரண்டு கொடி மரங்கள் கோவில் வளாகத்தில் இருந்து வெளியே எடுத்துச் செல்லப்பட்டது. இதனை அடுத்து சிலை கடத்தல் பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்