இறுதி கட்ட பிரச்சாரத்தை துவங்கினார் வேட்பாளர் ஜான்பாண்டியன்

568பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்தூரில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் ஜான்பாண்டியன் தனது இறுதி கட்ட பிரச்சாரத்தை தொடங்கினார். நாட்டின் 18 வது பாராளுமன்ற தேர்தல் தற்போது நடைபெற்று வரும் நிலையில் முதல் கட்ட வாக்குப்பதிவு 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. இதனால் மாநிலம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் இறுதி கட்ட பிரச்சாரத்தை இன்று காலை தொடங்கியுள்ளனர்

இந்நிலையில் தென்காசி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் தனது இறுதி கட்ட பிரச்சாரத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் கீழரத வீதி - தெற்கு ரத வீதி சந்திப்பில் துவங்கினார். திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் இத்தொகுதியின் முன்னேற்றத்திற்காக எவ்வித பணியும் செய்யவில்லை என்றும் தான் பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பர் என்பதால் தான் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் தொகுதியில் முன்னேற்ற பாடுபடுவேன் என்றும் இந்நாள் வரை செண்பகவல்லி அணை பற்றி பேசாத அரசியல் கட்சிகள் எங்களின் வாக்குறுதிக்கு பின்பே அதைப் பற்றி பேசி வருவதாகவும் ஆகையால் தாங்கள் வெற்றி பெறும் பட்சத்தில் நாங்கள் அளித்த அனைத்து வாக்குறுதியையும் பிரதமர் மோடியிடம் தெரிவித்து நிறைவேற்றுவேன் என்றும் கூறினார்