உடல் முழுவதும் மனுவை மாட்டிக் கொண்டு மனு அளித்த முதியவர்

78பார்த்தது
*செல்வச் சாமி என்ற 75 வயது முதியவர் தனக்கு இருக்க இடம் வேண்டி உடல் முழுவதும் மனுவை மாட்டிக் கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அமீர்பாளைய த்தை சேர்ந்த 75 வயது முதியவர் செல்வச்சாமி என்பவர் 5-ம் வகுப்பு வரை படித்துள்ளார். கடந்த 1975 ஆம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் வேறொரு நபருக்கு ஆசிரியர் வேலை வேண்டும் என்றால் குடும்பக் கட்டுப்பாடு செய்தால் தான் அரசு ஆசிரியர் வேலை கிடைக்கும் என்ற நோக்கத்தில் அந்த நபருக்காக என்னை ஏமாற்றி கூப்பிட்டு சென்று விட்டு எனக்கு குடும்பக்கட்டுப்பாடு செய்து அந்த நபர் ஆசிரியர் வேலை வாங்கியதாகவும்

என்னுடைய மனைவி, மகன்களைப் பிரிந்து கடந்த 20 வருடத்திற்கும் மேலாக தனியாக வசித்து வருவதாகவும், தன்னுடைய முதுமை காரணமாக தன்னால் எந்த வேலையும் செய்ய முடியாத காரணத்தால் தற்பொழுது பிச்சை எடுத்து வாழ்ந்து வருவதாகவும், ஆகையால் தனக்கு இருக்க இருப்பிட வசதி யை மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும் எனவும்


இது சம்மந்தமாக கடந்த 20 வருடமாக விருதுநகர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்திருப்பதாகவும் இந்த மனுவின் மீது இதுவரை மாவட்ட நிர்வாகமும், சம்மந்தப்பட்ட அதிகாரியும் உரிய நடவடிக்கை எடுக்க வில்லையெனவும்

எனவே இன்று உடல் முழுவதும் மனுவை மாட்டிக் கொண்டு விருதுநகர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்க வந்தார்

தொடர்புடைய செய்தி