விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தேவதானத்தில் விளைநிலத்துக்கு வண்டல் மண் எடுத்து சென்ற டிராக்டர் நிலை தடுமாறி தலை குப்புற கவிழ்ந்ததில்
டிரைவர் மாரிமுத்து (30) டிராக்டர் அடியில் சிக்கி பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.