பயங்கர வெறிச்செயல் பட்டாசு தொழிலாளிக்கு கத்தி குத்து...

62பார்த்தது
சிவகாசி அருகே பட்டாசு தொழிலாளியை கத்தியால் குத்திய பெண் கைது.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்துசிகாமணி மகன் கருப்பசாமி (39). இவர் டூவீலரில் சிவகாசியில் இருந்து திருத்தங்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். சிவகாசி பழைய ஒலிம்பிக் தியேட்டர் அருகில் பழக்கடையில் நின்று கொண்டிருந்த விஸ்வநத்தம் காகாகாலனியை சேர்ந்த சுப்பிரமணி மனைவி சுப்புலட்சுமி (38) என்பவரை இடிப்பது போல உரசி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் சுப்புலட்சுமிக்கும் கருப்பசாமிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சுப்புலட்சுமி பழக்கடையில் இருந்த கத்தியால் எடுத்து கருப்பசாமியை குத்தியுள்ளார். இதில் வயிற்றில் படுகாயம் அடைந்த நிலையில் கருப்பசாமி விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து சுப்புலட்சுமியை கைது செய்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி