சிவகாசி அருகே வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை. போலீஸார் விசாரணை.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே விஸ்வநத்தம் கணேசன் காலனியை சேர்ந்தவர் சந்தனகுமார் (31) இவருக்கு கற்பகவள்ளி என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் மது அருந்தும் பழக்கம் உள்ள சந்தனகுமார் தனது மனைவி கற்பகவள்ளியிடம் பணம் கேட்டுள்ளார். இதற்கு கற்பகவள்ளி பணம் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் விரகத்தியடைந்த வாலிபர் சந்தனகுமார் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து சிவகாசி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.