பெரம்பலூர்: வெங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் குளிப்பதை கைப்பேசியில் வீடியோ எடுத்த இளைஞர்கள் இருவர் மீது போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர். வெங்கலம் கிராமத்தில் பெண்கள் குளிப்பதை கைபேசியில் வீடியோ எடுத்த வழக்கில் நீதிமன்ற காவலில் இருந்து வரும் குற்றவாளிகள் மோகன்ராஜ், ஜெயபிரகாஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று அவ்வழக்கின் சட்டப்பிரிவுகள் மாற்றம் செய்யப்பட்டு போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.