திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கார் மோதியதில் மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சாலையை கடக்க முயன்ற ராஜாமணி என்ற அந்த பெண் மீது கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக கார் ஓட்டுநர் அப்துல் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். விபத்து குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.