அரசு பள்ளி மாணவர்களின் சாதனையை பாராட்டிய ஆசிரியர்கள்

53பார்த்தது
அரசு பள்ளி மாணவர்களின் சாதனையை பாராட்டிய ஆசிரியர்கள்
மாவட்ட  அளவில் விருதுநகரிலுள்ள விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வைத்து நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில் 400 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் மீனம்பட்டி அரசு பள்ளி மாணவர்கள் 45-55 எடை பிரிவில் வி. அன்புமணி முதலிடம் மற்றும் 55 - 65 எடை பிரிவில் வி. அஜய் முதலிடம் பெற்று சாதனை படைத்து உள்ளனர். இதன் மூலம் மாநில அளவிலான சிலம்ப போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். மாவட்ட போட்டிகளில் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்ற சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார், உதவி தலைமை ஆசிரியர் ஜான் விக்டர். உடற்கல்வி ஆசிரியர் ஸ்ரீதர்  மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி