சிவகாசி: வெறிநாய் தடுப்பூசி முகாம்...

1079பார்த்தது
சிவகாசி: வெறிநாய் தடுப்பூசி முகாம்...
சிவகாசி அருகே உள்ள ஆனைக்குட்டம் ஊராட்சியில்
நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே உள்ள ஆனைக்குட்டம் ஊராட்சியில்
நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
சிவகாசி அருகே உள்ள ஆனைக்குட்டம் ஊராட்சியில் தெரு நாய்களின் தொந்தரவு அதிகமாக இருந்தது. இதனால் கிராம மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அண்மையில் தெரு நாய்கள் துரத்தி, துரத்தி கடத்ததில் 10 பேர் காயம் அடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் முத்துராஜூவிடம் கிராம மக்கள் புகார் தெரிவித்தார். அதன் பேரில் ஆனைக்குட்டம் ஊராட்சி அலுவலகத்தில் நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. கால்நடை மருத்துவக்குழுவினர் 30 நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி போட்டனர். இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் முத்துராஜ் செய்திருந்தார். இதனால் ஆனைக்குட்டம் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி