சிவகாசி அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே விஜயலட்சுமி காலனியை சோந்தவர் கணேசன் ( 60). இவரது மகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்ததால் மனமுடைந்து காணப் பட்டார். இந்நிலையில் சம்பவத்தன்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகள் உமாமகேஸ்வரி சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.