சிவகாசி வழக்கறிஞர், அதிமுக கட்சியின் மாநில வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளராக நியமனம். தலைமை கழகம் அறிவிப்பு.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகேயுள்ள எஸ். புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாரீஸ்குமார். வழக்கறிஞரான இவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராக உள்ளார். நீண்ட வருடங்களாக அதிமுக உறுப்பினராக இருந்து வரும் மாரீஸ்குமாருக்கு, மாநில அளவில் கட்சி பொறுப்பு வழங்குமாறு, முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திரபாலாஜி, அதிமுக பொது செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையின் பேரில், வழக்கறிஞர் மாரீஸ்குமாரை மாநில வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளராக அறிவித்து தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கட்சியில் பொறுப்பு வழங்கிய பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், பரிந்துரை செய்த முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திரபாலாஜிக்கும், வழக்கறிஞர் மாரீஸ்குமார் நன்றி கூறினார்.