சென்னை பத்திரிகையாளர் மன்றத் தேர்தல் - விஜய் வாழ்த்து

76பார்த்தது
சென்னை பத்திரிகையாளர் மன்றத் தேர்தல் - விஜய் வாழ்த்து
சென்னை பத்திரிகையாளர் மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது தள பக்கத்தில், "தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். ஜனநாயகத்தின் நான்காவது தூணாகிய பத்திரிகையாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்து, என்றும் நடுநிலையுடன் ஊடக அறத்தைப் போற்றி, புதிய நிர்வாகக் குழு வெற்றிகரமாகச் செயல்பட வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி