கேரளாவில் அமைந்துள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றது. இந்த கோயிலுக்குச் செல்லும் இளம்பெண்கள் பலரும் புடவையை காணிக்கையாக செலுத்துகின்றனர். இங்கு புடவை காணிக்கை செலுத்தினால் விரைவில் திருமணம் நடக்கும் என்பதும், நல்ல வரனாக அமையும் என்பதும் நம்பிக்கை. ஏராளமான புடவைகள் காணிக்கையாக வருவதால் தினமும் அம்மனுக்கு குறைந்தது 6 முதல் 8 முறையாவது புடவை மாற்றப்படுகிறது.