காதலியுடன் சேர்ந்து தந்தையை உயிருடன் எரித்துக் கொன்ற மகன்

62பார்த்தது
காதலியுடன் சேர்ந்து தந்தையை உயிருடன் எரித்துக் கொன்ற மகன்
உ.பி: சொத்துத் தகராறில் காதலியுடன் சேர்ந்து தந்தையை மகன் எரித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமாபூர் கிராமத்தை சேர்ந்த ராமு ராவத் (44) என்ற விவசாயியின் உடல் கடந்த டிச.13-ம் தேதி அவரது வயலில் உள்ள கிணற்றில் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, ராமுவின் மகன் தர்மேஷிடம் [26] போலீஸ் விசாரணை நடத்தியதில், சொத்தில் தனது பங்கை தர மறுத்ததால் தந்தையை, தனது காதலி சங்கீதா(24) உடன் சேர்ந்து எரித்துக்கொன்றதாக வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி