சிவகாசி: தங்க மோதிரம் பரிசுமுன்னாள் அமைச்சர்...

595பார்த்தது
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில், அதிக வாக்குகள் பெற்று தரும் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு 'தங்க மோதிரம்' முன்னாள் அமைச்சர் அறிவிப்பு.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், அதிமுக விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திரபாலாஜி தலைமையில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திரபாலாஜி பேசும் போது, விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில், அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக போட்டியிடுகிறது. வேட்பாளராக விஜயபிரபாகரன் களத்தில் உள்ளார். அதே போல, தென்காசி நாடாளுமன்ற தொகுதியில், நமது கூட்டணியில் உள்ள புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி களத்தில் உள்ளார். இவர்கள் இருவரையும் வெற்றி பெற வைக்க வேண்டியது அதிமுக கட்சியின் லட்சியமாகும். இந்த இரண்டு தொகுதியிலும் அதிக வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு அழைத்து வந்து வாக்கு செலுத்த வைக்க வேண்டியது நிர்வாகிகளின் பொறுப்பாகும். வாக்கு எண்ணிக்கையில் எந்த வாக்குச் சாவடியில் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அதிக வாக்குகள் பெற்றுள்ள, அந்த வாக்குச் சாவடி பொறுப்பாளர்களுக்கு, அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கையினால் தங்க மோதிரம் பரிசாக வழங்கப்படும் என்று பேசினார். முன்னாள் அமைச்சரின் இந்த அறிவிப்பு அதிமுக கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி