விருதுநகர் மாவட்டம்,சிவகாசி அருகே உள்ள வெள்ளையாபுரத்தை சேர்ந்த சிவா, மங்காபுரத்தை சேர்ந்த செல்வகுமார் ஆகிய இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு பயின்று வருகின்றனர்.
கல்லுரியிலிருந்து இருவரும் பைக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்றுள்ளனர். ஈஞ்சார் சந்திப்பு பகுதியில் வைத்து தனது மனைவியுடன் பைக்கில் வந்த வெள்ளையாபுரத்தை சேர்ந்த கணேஷ்பாண்டி ஓட்டி வந்த பைக் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே கல்லூரி மாணவன் செல்வக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் 3 பேரும் பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளனர். அப்போது சிவகாசியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திரபாலாஜி உடனே காரை நிறுத்திவிட்டு விபத்தில் சிக்கிய மூன்று பேரை மீட்டு உடனடியாக தனது காரிலும் தனது ஆதரவாளர்களின் காரிலும் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தார்.
மேலும் சிகிச்சையில் உள்ள மூன்று பேரிடம் நலம் விசாரித்த அவர் அவர்களின் நிலை குறித்து தலைமை மருத்துவர் அய்யனாரிடம் கேட்டறிந்தார்.