சிவகாசி அருகே மாரனேரியில்
புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்துக்கு பூமிபூஜை.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாரனேரி ஊராட்சி மன்ற அலுவலகம் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் போதிய வசதிகள் இல்லாத நிலையில் கட்டிடமும் சேதம் அடைந்து காணப்பட்டது. இது குறித்து ஊராட்சி நிர்வாகம் சிவகாசி ஊராட்சி ஒன்றிய தலைவர் முத்துலட்சுமி, துணைத்தலைவர் விவேகன்ராஜ் மற்றும் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில் கட்டிடத்தை நேரில் ஆய்வு செய்த அதிகாரிகள் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புதிய கட்டிடம் கட்ட அனுமதி யும் அதற்காக ரூ. 32 லட்சத்து 40 ஆயிரம் நிதியும் ஒதுக்கினர்.
இந் நிலையில் பழைய கட்டிடத்தை ஊராட்சி நிர்வாகத்தினர் கடந்த சில நாட்க ளுக்கு முன்னர் அகற்றினர். அந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்ட பூமிபூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிவகாசி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவரும், திமுக ஒன்றிய செயலாளருமான விவேகன்ராஜ் கலந்து கொண்டு புதிய கட்டிடத் துக்கான பணியினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற பொறுப்பு தலைவர் சீனிவாசன், துணைத்தலைவர் முத்து, வார்டு உறுப்பினர்கள் கங்காதேவி மணிக்கண்ணன், சந்திரா மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் முத்துக்கிருஷ்ணன் செய்திருந்தார்.