சிவகாசியில் சகதிக்காடாய் காட்சியளிக்கும் தொழிற்பேட்டை பொருட்கள் ஏற்றி வரும் கனரக வாகனங்கள் கடும் பாதிப்பு.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் ரிசர்வ்லயனில் கூட்டுறவு தொழிற்பேட்டை உள்ளது. இந்த கூட்டுறவு தொழிற்பேட்டையில் சுமார் 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. தமிழகம் மற்றும் வடமாநிலங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு இங்கிருந்து தான் புத்தகங்களும் மற்றும் பிரிண்டிங் பேப்பர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும் பேப்பர் கப் தயாரிப்பு, பேகேசிங் போன்ற பல்வேறு தொழில்கள் இந்த தொழிற்பேட்டையில் இயங்கி வருகின்றன. வர்த்தகப் பகுதியாக திகழும் இந்த தொழிற்பேட்டையில் போதிய சாலை வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் இன்றி தொழில் நிறுவனங்கள்,
தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிற்பேட்டைக்குள் பல பகுதிகள் மண் மேடாகவும், சகதிக்கடாகவும் காணப்படுகின்றன. மழை காலங்களில் தொழிற்பேட்டை சாலையை பயன்படுத்தவே முடியாத நிலையிலுள்ளன. இதனால் பொருட்கள் ஏற்றி வரும் கனரக வாகனங்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். மேலும் தொழிற்பேட்டைக்கு என தனியாக அதிகாரிகள், பணியில் இருந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை, எனவே உடனடியாக அடிப்படை வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.