பாகிஸ்தானில் கைபர் பக்துன்கவாவில் அப்பாவி பொதுமக்கள் 38 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பராசினார் என்ற பகுதியிலிருந்து பெஷாவர் நோக்கி வேன்களில் சென்று கொண்டிருந்தவர்கள் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. குர்ரம் என்ற இடத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண்கள், குழந்தைகள் உள்பட 38 பேர் கொல்லப்பட்டனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்கும் என தெரிகிறது.