சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று (நவ. 21) நடைபெற்ற 2வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து சிங்கப்பூரின் ஜியா மின் உடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ஜியா மின் 16-21 21-17 21-23 என்ற கணக்கில் வெற்றி பெற்றார், அதிர்ச்சி தோல்வியடைந்த சிந்து தொடரில் இருந்து வெளியேறினார்.