ஒடிசா: பழங்குடி சமூகத்தை சேர்ந்த இளம் பெண்ணின் வாயில் மனித மலத்தை திணித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜுராபந்த் எனும் கிராமத்தை சேர்ந்த பழங்குடியின பெண் நிலத்தில், அபய் பக் என்ற நபர் டிராக்டரை ஓட்டி வந்து பயிரை சேதப்படுத்தியுள்ளார். இதை கண்டித்து இளம்பெண் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவத்திற்கு பழிவாங்க எண்ணிய அபய் பக், அந்த இளம்பெண்ணை தாக்கி, அவரது வாயில் மனித மலத்தை திணித்துள்ளார். இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டும் அபய் பக் கைது செய்யப்படவில்லை.