தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரம் தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, தனக்கு ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்த நிலையில் அவருக்கு எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. அதனைத் தொடர்ந்து, இன்று புழல் சிறையில் இருந்து அவர் வெளியே வந்தார். அவரது ஆதரவாளர் கஸ்தூரியை வரவேற்றனர்.