உக்ரைன் தலைநகர் கீவில் செயல்பட்டு வந்த அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கீவ் நகர் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதல் நடத்தக்கூடுமென அஞ்சப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர். உக்ரைனில் வசிக்கும் அமெரிக்க குடிமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறும் தூதரகத்தில் இருப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களை செல்ல அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.