நமது உடலில் இருக்கும் அதிக கொலஸ்ட்ரால் அளவை வெளியில் காட்டும் முக்கிய அறிகுறிகள் உள்ளன. அதன்படி, கை கால்களில் அடிக்கடி கூச்ச உணர்வு ஏற்படும். கண் இமைகளைச் சுற்றி சிறிய, மஞ்சள் நிற புடைப்புகள் உருவாகும். மார்பு வலி அல்லது இதய பகுதியில் அசௌகரியம் அடிக்கடி ஏற்படும். நினைவாற்றல் அடிக்கடி இழப்பதை உணர்ந்தால் கொலஸ்ட்ரால் அதிகரிப்பை உணர்ந்து கொள்ளலாம். கால்கள் அடிக்கடி குளிர்ச்சியடைவது, உணர்விண்மை அல்லது திடீர் வலி ஆகியவை கொலஸ்ட்ரால் அதிகரிப்பின் அறிகுறிகள்.