ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணியின் கேப்டனாக பும்ரா செயல்படுகிறார். கேப்டன் பொறுப்பை ஏற்றபின்பு செய்தியாளர்களைச் சந்தித்த பும்ரா, “கேப்டனாக அணியை வழிநடத்துவது கவுரமான விஷயம். இது ஒரு பாக்கியம். இதை நான் ஒரு பதவியாக எடுத்துக்கொள்ளவில்லை. பொறுப்பாக எடுத்து கொள்கிறேன். விராட் கோலி, ரோகித் போல எனக்கும் தனியாக ஒரு ஸ்டைல் இருக்கிறது. எனக்கென்று ஒரு தனி வழி இருக்கிறது” வெளிப்படையாக பேசியுள்ளார்.