தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரம் தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், நிபந்தனை ஜாமீனில் இன்று வெளியே வந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அரசியல் வித்தியாசம் பாராமல் எனக்கு ஆதரவு தெரிவித்த தலைவர்கள், நண்பர்களுக்கு நன்றி. சிறு குரலாக இருந்த என்னை சீறும் புயலாக மாற்றிய அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி” என்றார்.