விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் காமராஜர்நகரை சேர்ந்தவர் அசோக்குமார் மகன் பிரவீன்குமார் (15). இவர் அதே பகுதியிலுள்ள விஸ்வநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தான். சம்பவத்தன்று பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
இது குறித்து அவரது தாய் முத்துலட்சுமி கேட்ட போது தேர்வுக்கு படிக்கவில்லை என்று கூறிவிட்டு வீட்டின் மேல் மாடியில் உள்ள அறைக்கு சென்றுள்ளார். அங்கு பிரவீன்குமார் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவன் பிரவீன்குமார் தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.