சிவகாசி அரசு மருத்துவமனையில் மக்கள் நல
வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணி திடீர் ஆய்வு.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அரசு மருத்துவமனையில் இன்று காலை 7 மணியளவில் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர்
மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கண்டார். சிவகாசி அரசு மருத்துவமனையில் அமைச்சர்
மா சுப்பிரமணியன் ரத்தப் பரிசோதனை ஆய்வு, ரத்த வங்கி, குழந்தைகள் வாழ்வில் மகப்பேறு அவசர சிகிச்சை, தீக்காய சிகிச்சை, சித்த மருத்துவ, இயற்கை வைத்திய,
உள் நோயாளிகள், காசநோய், ஆகிய பிரிவுகளிலும், மேலும் சமயலறை பகுதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நோயாளிகளிடம் சிகிச்சை பெறுவதில் பிரச்சனை உள்ளதா என கேட்டறிந்தார் அமைச்சர், உணவு, சுகாதாரம், குடிநீர் வசதி எப்படி உள்ளது என உள் நோயாளியிடம் கேட்டறிந்தார் பின்னர் மருத்துவமனையில் கூடுதல் கட்டடங்கள் கட்டும் பணியை பார்வையிட்டார் இயற்கை மருத்துவ பிரிவுக்கு தனியே கட்டிடம் வேண்டும் எனவும் அறுவை சிகிச்சை பிரிவுக்கு மின் தூக்கி அமைக்க வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை வைத்தனர் உடனடியாக அமைச்சர் உங்களது கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும் என்றார். முன்னதாக அமைச்சரை தலைமை மருத்துவர் அய்யனார் வரவேற்றார், உடன் செவிலியர்கள், ஊழியர்கள் உடன் இருந்தனர்.