அருப்புக்கோட்டை புளியம்பட்டியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேற்று ஜீலை 26 ஆடி வெள்ளியை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ ஆயிரங்கண் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். முன்னதாக மாரியம்மனுக்கு பால், பழம், பன்னீர், மஞ்சள் என பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களால்
பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தீப தூப ஆராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.