மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

60பார்த்தது
அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டியில் மின்வாரிய அலுவலகம் எதிரே இன்று விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் தொடர்ந்து மின் கட்டணத்தை அதிகரித்து வரும் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ‌ அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில், தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் சிங்கை ராமச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர். ‌ அப்போது மின் கட்டண உயர்வை கண்டித்தும், ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் வழங்காததை கண்டித்தும் அதிமுகவினர் கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி