சாலை விரிவாக்க பணிக்காக மின் கம்பங்கள் இடமாற்றம்

75பார்த்தது
சாலை விரிவாக்க பணிக்காக மின் கம்பங்கள் இடமாற்றம்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகர் வெம்பக்கோட்டை சாலை மெயின் சாலையில் வாகனங்கள் அதிகளவில் செல்வதால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டே இருக்கம். அதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்வதில் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அடிக்கடி விபத்தில் சிக்கியும் வருவதால் ரூ. 14 கோடி மதிப்பில் சாலையை அகலப்படுத்தும் பணிகள் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக சாலையில் இரு பகுதியில் சாலை விரிவாக்கத்திற்கு இடையூராக இருக்கும் மின் கம்பங்களை அகற்றி மாற்று இடத்தில் நடும் பணியை மின் வாரியத்தினர் செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி