விருதுநகர் மாவட்டத்தில் 3ஆவது புத்தகத்திருவிழா, செப்.,27ஆம் தேதி முதல் அக்.,7 ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறவுள்ளது. இப்புத்தகத் திருவிழாவின் மைய நோக்கம் "மரமும், மரபும்", அதாவது சுற்றுச்சூழலையும், நமது பண்பாட்டையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாகும்.
இதனடிப்படையில் இப்புத்தகக் கண்காட்சியில், நூறாண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களைக் காட்சிப்படுத்தும் கலைக்காட்சி அரங்கம் அமைக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, விருதுநகர் மாவட்டத்தின் வரலாறு, வளர்ச்சி, பண்பாடு, பின்பற்றிய பழக்க வழக்கங்கள், நடைமுறைகள், தொழில்கள் ஆகியவற்றை எடுத்துரைக்கும் வகையில் உள்ள நூறாண்டுகளுக்கு முந்தைய, அரிய புகைப்படங்கள் மற்றும் பழமையான, அரிய ஆவணங்கள், ஆகியவை பொது மக்களிடம் இருந்து வரவேற்கப் படுகின்றன.
பழமையான புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களை, செப்20-ம் தேதிக்குள், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சுற்றுலா அலுவலகத்தில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வேலை நாள்களிலும் நேரில் வந்து கொடுக்கலாம். இது தொடர்பாக 73977-15688 -என்ற கைப்பேசி எண்ணில் மாவட்ட சுற்றுலா அலுவலரைத் தொடர்பு கொள்ளலாம்.