பதுக்கி வைத்திருந்த ரூ. 3 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்

3243பார்த்தது
பதுக்கி வைத்திருந்த ரூ. 3 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே மடத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன்(55) இவருக்கு சொந்தமான மூலிகை கிட்டங்கி எட்டக்காபட்டி அருகே உள்ளது , இந்த கிட்டங்கியில் அவுரிஇலை அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், அங்கு திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து வெம்பக்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, தகவலறிந்து அங்கு சென்ற வெம்பக்கோட்டை தீயணைப்பு வீரா்கள், சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

பின்னர் அருகில் இருந்த அவரது நாகாஸ் ஸ்பார்க்கர்ஸ் பட்டாசு ஆலையை வெம்பகோட்டை போலீசார் மற்றும் கணஞ்சாம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் மகேஸ்வரன் ஆகியோர் சோதனை செய்தனர். பட்டாசு ஆலையை சோதனை செய்ததில் அனுமதி இன்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ. 3லட்சம் மதிப்பிலான கம்பி மத்தாப்பு பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மனோகரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

முதல் கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்ததாக தெரிய வந்தது. இந்த தீ விபத்தில் சுமாா் ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின.

தொடர்புடைய செய்தி