முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு அடி உதை

3973பார்த்தது
முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு அடி உதை
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஓ. மேட்டுப்பட்டியில் தேமுதிக பிரச்சார கூட்டம் நேற்று நடந்தது.
அங்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பொதுமக்களிடம் விஜயாபிரபாகரனுக்கு வாக்கு சேகரித்தார். பின்னர் அங்கிருந்து சாத்தூர் பகுதிக்கு செல்ல புறப்பட்ட போது முன்னாடி இருந்த காரில் அமர்ந்திருந்த அதிமுக முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மனை, அதிமுகவை சேர்ந்தவர்கள் சரமாரியாக் தாக்கினர். அவர்களிடமிருந்து உடனே ராஜவர்மன் காரில் தப்பி சென்றார். அப்போதும் விடாமல் அவரின் கரை தாக்கினர். இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.