சாத்தூரில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை ஆட்சியர் ஆய்வு

63பார்த்தது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன் இன்று(செப்.5) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்படி சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், கே. மேட்டுப்பட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டங்களின் கீழ் ரூ. 25. 11 இலட்சம் மற்றும் ரூ. 12 இலட்சம் மதிப்பில் இரண்டு சமுதாய நீர் சேகரிப்பு புதிய குளங்கள் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும், என். மேட்டுபட்டி கிராமத்தில்; மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 2. 96 இலட்சம் மதிப்பில் ஆடு மற்றும் மாட்டுக் கொட்டகைகள் கட்டப்பட்டுள்ளதையும், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் அரசு மானியத்தில் குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருவதையும், எம். நாகலாபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 14. 72 இலட்சம் மதிப்பில் சமுதாய நீர் சேகரிப்பு புதிய குளம் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும், நென்மேனி ஊராட்சி வன்னிமடை கிராமத்தில் பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ. 1. 81 கோடி மதிப்பில் பாலம் கட்டப்பட்டு வரும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி