சாத்தூர்: கண்மாயில் செத்து மிதந்த மீன்கள்....

68பார்த்தது
சாத்தூர் அருகே கண்மாயில் செத்து மிதந்த மீன்கள். போலீஸார் விசாரணை. விருதுநகர் மாவட்டம்,
சாத்தூர் அருகில் வெம்பக்கோட்டை கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் கரைகளில் ஏராளமான மீன்கள் செத்து கிடப்பதாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவித்த தகவலின் பேரில் சாத்தூர் கோட்டாட்சியர் சிவகுமார், வெம்பக்கோட்டை தாசில்தார் கலைவாணி, வைப்பாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் மலர்விழி, உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், நீர்வளத்துறை உதவி பொறியாளர் கண்ணன், ஆகியோர் கண்மாய்க்கு நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது கண்மாய் கரையோரங்களில் ஏராளமான ஜிலேபி வகை மீன்கள் செத்து கிடப்பதை பார்வையிட்டனர். பின்னர் அதிகாரிகள் கூறும் போது, தற்போது வெயில் கடுமையாக இருப்பதால் தண்ணீரில் சூடு தாங்காமல் இந்த மீன்கள் இறந்திருக்கலாம், மீன்கள் சுவாசிப்பதற்கு தேவையான நீர்மட்டம் குறைந்ததாலும் மீன்கள் இறந்திருக்க வாய்ப்புள்ளது. மற்ற படி தண்ணீரில் விஷத்தன்மை ஏதும் கலந்திருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் கண்மாய் நீரினை சோதனைக்காக எடுத்துச் செல்லப்படுகிறது. அதன் ஆய்வு செய்த பின்னர் மீன்கள் இறந்ததற்கான காரணம் தெரிய வரும் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இறந்த மீன்களை அருகில் குழி தோண்டி புதைக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி