ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் குமார், யோகிபாபு உட்பட பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், ரசிகர் ஒருவர் செல்போனில் அஜித்தின் GBU படக் காட்சியைக் கண்டு ஆரவாரத்தில் முத்தம் கொடுத்தார். பின் உற்சாகமிகுதியில் கழிவுநீர் செல்லும் சிமெண்ட் கல்லின்மீது பாய்ந்து குதித்தபோது, சிமெண்ட் கல் திடீரென உடைந்தது. இதனால் ரசிகர் லேசான காயத்துடன் தப்பித்துக்கொண்டார். இந்தக் காட்சிகள் வைரலாகி வருகின்றன.