திருவிழாவில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி

59பார்த்தது
திருவிழாவில் மின்சாரம் தாக்கி  ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி
விருதுநகர்: காரிசேரி மாரியம்மன் கோயில் திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவிழாவிற்கு மைக் செட் கட்டும்போது மின்சாரம் தாக்கியதில், மைக் செட் உரிமையாளர் திருப்பதி (28) அவரது 7 மாத கர்ப்பிணி மனைவி லலிதா (25), திருப்பதியின் பாட்டி பாக்கியம் (65) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களை காப்பாற்ற முயன்ற இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி