திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள அரசுப் பள்ளியில் படித்து வருபவர் அபினேஷ். இவர் பள்ளியில் பட்டாசு வெடித்தபோது அவரது கை விரல் துண்டானது. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு வகுப்பில், கையில் வைத்து பட்டாசை அபினேஷ் வெடித்த போது விபரீதம் ஏற்பட்டுள்ளது. மாணவனின் வலது கையில் உள்ள ஒரு விரல் துண்டான நிலையில் மற்ற 4 விரல்களிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் மாணவர் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.