ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் தியானேஷ்வர் - அனுஷா தம்பதி. இவர்கள், காதலித்து வந்த நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று, தனது மனைவியை தியானேஷ்வர் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். அனுஷா கர்ப்பமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.