நுங்கு பறிக்க பனைமரத்தில் ஏறியவர் கீழே விழுந்து பலி

80பார்த்தது
நுங்கு பறிக்க பனைமரத்தில் ஏறியவர் கீழே விழுந்து பலி
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நீராவிப்பட்டியை சேர்ந்தவர் சிவலிங்கம் (37), இவர் காட்டுப்பகுதியில் இருக்கும்
பனை மரத்தில் ஏறி நுங்கு காய்களை பறிப்பது வழக்கம். நேற்று மாலை நுங்கு பறிக்க பனைமரத்தில் ஏறும் போது வழுக்கி விழுந்தவரை அப்பகுதியினர் மீட்டு சாத்தூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் குறித்து மனைவி கற்பக வள்ளி (37), கொடுத்த புகாரில் இருக்கன்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி