ராஜபாளையம் அருகே டிராக்டர் கவிழ்ந்து ஓட்டுனர் பலி
ராஜபாளையம் அருகே தென்றல் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து. வாகன ஓட்டுனரான இவர் கிழவிகுளத்தை சேர்ந்த அம்மையப்பன் என்பவரது டிராக்டரை எடுத்துக் கொண்டு சேர்த்துரை சேர்ந்த அழகுராஜா என்பவருக்காக கண்மாயிலிருந்து மண் எடுப்பதற்காக சென்றுள்ளார்.
வாழவந்தாள் கண்மாயில் இருந்து விவசாய நிலத்திற்கு தேவையான மண்ணை டிராக்டரில் அள்ளிக் கொண்டு அருகே அமைந்துள்ள நடுவக்குளம் கண்மாய் வழியே குறுக்குப் பாதையில் சென்றுள்ளார். அப்போது கண்மாயின் மேட்டு பகுதியில் திரும்பியபோது எதிர்பாராத விதமாக டிராக்டர் முன்பக்கமாக கவிழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் டிராக்டரின் அடிப்பகுதியில் சிக்கிக்கொண்ட மாரிமுத்து உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து வந்த சேத்தூர் காவல்துறையினர் மாரிமுத்துவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.