ராஜபாளையம் அருகே தென்மண்டல அளவிலான தடகளப் போட்டி

82பார்த்தது
ராஜபாளையம் அருகேமுகவூரில் செயல்படும் தனியார் அறக்கட்டளை மற்றும் விளையாட்டு கலைக்கூடம் சார்பில் பாரதரத்னா காமராஜரின் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு தென்மண்டல அளவிலான தடகளப் போட்டிதனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இப் போட்டிகளில் விருதுநகர், கன்னியாகுமரி, மதுரை, நெல்லை, தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் செயல்படும் 70 பள்ளிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 10 முதல் 17 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவிகளுக்கு 5 வயது பிரிவுகளில் தனித் தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது. 50 மீ, 80 மீ, 200 மீ, 400 மீ, 800 மீ மற்றும் 1500 மீட்டர் என 6 பிரிவுகளில் நடந்த ஓட்டப் போட்டியில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடினர்.
தொடர் ஓட்டம் 100, 200 மற்றும் 400 மீட்டர் என 3 பிரிவுகளில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது. மேலும் குண்டு எறிதல், வட்டு எறிதல், நீளம்தாண்டுதல், சிறுவர்களுக்கான தடை தாண்டுதல், பந்து எறிதல் போட்டிகளும் விறுவிறுப்புடன் நடைபெற்றது. மொத்தமாக நடைபெற்ற 57 போட்டிகளில் ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ரொக்க பரிசுடன், பதக்கம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. 2 ஒட்டு மொத்த சாம்பியன் பரிசுக் கோப்பையும், அதிக பரிசுகளை வென்ற மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு முதல் 3 இடங்களுக்கான நிரந்தரக் கோப்பையும் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி