இராஜபாளையம் அருகே பேருந்து நிறுத்ததில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த வாலிபர் கைது. லாட்டரி சீட்டுகள் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
இராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பேருந்து நிறுத்தம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வந்தன. இது குறித்து தளவாய்புரம் காவல் நிலையத்துக்கு தகவல் வந்தன. மேற்படி தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் செல்வம் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்தில் சோதனை செய்தனர். சோதனையில் முத்துசாமிபுரம் சேர்ந்த சங்கர மகாலிங்கம் என்பவர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வந்தன. மேலும் அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணத்தை கைப்பற்றிய போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.