திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்ஜிஆர் கடந்த 1972-இல் அதிமுக என்ற கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கிய வெறும் ஆறு மாதங்களில் 1973 திண்டுக்கல் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மாயத்தேவர் அபார வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் தான் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் முதல் முறையாக களம் கண்டது. தேர்தல் பிரசாரத்திற்காக திண்டுக்கல் வந்த எம்ஜிஆரை மக்கள் கொண்டாடினர். அது வாக்குகளாகவும் மாறியது.