திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டிப்பனூர் கிராமத்தில் உள்ள மலைப்பகுதியின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது பாப்பாத்தி அம்மன் திருக்கோயில். சக்தி வாய்ந்த பாப்பாத்தி அம்மன் கோயிலில் ஒரு அதிசய தீர்த்தக்குளம் இருக்கிறது. இது மனிதர்களால் உணர்ந்து கொள்ளப்படாத மர்மமாக உள்ளது. இக்குளம் வெறும் ஐந்து அடி ஆழம்தான், ஆனால் இக்குளத்தில் தண்ணீர் எங்கிருந்து உற்பத்தி ஆகிறது என்று இன்றளவும் யாருக்கும் தெரியாத நிலை உள்ளது.