இராஜபாளையம்: மத்திய நிதி அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

78பார்த்தது
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஜவகர் மைதானம் எதிரே எம். கே. தியாகராஜ பாகவதர் பேரவை மற்றும் கம்மாள விஸ்வகர்மா சமுதாயத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்திற்கான நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், தங்களது சமுதாயம் அல்லாத பிற 13 சமுதாயங்களை சேர்ந்தவர்களையும் விஸ்வகர்மா சமுதாயத்தினர் என கூறி தங்களை இழிவு படுத்தியதாகவும், உளி சுத்தியல் பிடித்தவர்கள் அனைவருக்கும் விஸ்வகர்மா என சான்றிதழ் வழங்குவதாகவும் குற்றம் சாட்டினர்.

இது குறித்து தாங்கள் எதிர்ப்பு தெரிவித்தும், பேசியதற்கு மன்னிப்பு கேட்காமலும், தனது பேச்சசுக்கு மறுப்பு தெரிவிக்காமலும் மத்திய அமைச்சர் அலட்சியம் காட்டுவதாகவும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும் தங்களை அலட்சியம் செய்யும் பட்சத்தில் வரும் காலங்களில் பாஜகவுக்கு வாக்களிக்காமல் தாங்களும் எதிர்ப்பு தெரிவிப்போம் எனவும், பேச்சுக்கு மறுப்பு தெரிவிக்க கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி