ராஜபாளையத்தில் தரைப்பாலம் அமைக்க தாமதம் வாகன ஓட்டிகள் அவதி

71பார்த்தது
ராஜபாளையத்தில் தரைப்பாலம் அமைக்க தாமதம் வாகன ஓட்டிகள் அவதி
ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே நான்கு முக்கு ரோட்டில் சாக்கடை தரைப்பால பணிக்காக தோண்டி 15 நாட்கள் ஆகியும் முடிவடையாமல் உள்ளதால் குடியிருப்போர், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். ராஜபாளையம் நகராட்சி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே காமராஜர் சிலை பின்புறம் 14-வது வார்டுக்கு உட்பட்ட திருவள்ளுவர் தெரு உள்ளது. பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து பெரியகடை பஜார் உள்ளிட்ட 300க்கும் அதிக குடியிருப்பு பகுதியை கடப்பதற்கு பிரதான பாதையாக அமைந்துள்ளது. இங்கு 15 நாட்களுக்கு முன் சாக்கடை தரைப்பால பணிக்காக தெருவின் நான்கு முக்கு ரோட்டில் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் தொடங்காமல் வைத்துள்ளனர். இதனால் இப்பகுதி குடியிருப்போரின் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் ஆட்டோ உள்ளிட்ட எவ்வித வாகனமும் சென்று வர வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இது போன்ற அதிக போக்குவரத்து உள்ள பகுதிகளில் பணிகளை தொடங்கி விரைந்து முடிக்க மக்கள் எதிர்பார்க்கின்றனர். நாகராஜன், நகராட்சி கமிஷனர்: தரைப்பாலத்தை உடைத்த பின் பணிகளை தொடங்கும் போது ஏராளமான குடிநீர் குழாய் இணைப்பு தடை பட்டதாக புகார் வந்தது. முறையாக ஆய்வு செய்து சரி செய்த பின் பணிகளை தொடங்குவதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் தொடங்கப்படும்.

டேக்ஸ் :